மாநாட்டின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம்! விக்கிரமபாகு கருணாரட்ண

vikramaபொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் போது எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கூட்டு எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.

மாநாடு நடைபெறும் போது கூட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தும் என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

எமது நாட்டின் உண்மை நிலையை மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகநாடுகளுக்கு சுட்டிக்காட்டுவததே இந்த எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

தமது அயல்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள், இனவெறி தொடர்பில் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் மேலும் கூறினார்.

காணாமல் போனவர்களை நினைவுகூறும் முகமாக நவம்பர் 14 மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்வு ஒன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த எதிர்ப்பு இயக்கத்தினால் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கருணாரத்ன தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply