பகுபாய்வுக்காக என்புகளை சீனாவுக்கு அனுப்ப உத்தரவு

mattalaiமாத்தளை, குவியல் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பிவைப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த எலும்புகளின் எச்சங்களை சீனாவுக்கு அனுப்புவதற்கு ஆட்சேபங்கள் இருந்த போதிலும் எலும்பு எச்சங்களின் மாதிரிகளை காலம் நிர்ணயிக்கும் காபன் சோதனைக்காகவே சீனாவுக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன.

எலும்புகளின் எச்சங்களை சீனாவுக்கு அனுப்புவதற்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட அனுமதியையே மாத்தளை நீதவான் நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.

மாத்தளை நீதிமன்றம், எலும்புகளின் மாதிரியை காபன் சோதனைக்கு சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பணித்திருந்தது.

இதனை பாதிக்கப்பட்ட தரப்பு வழக்குறைஞர் ஆட்சேபித்தார். சீனாவின் சட்டமுறைமை, நீதி நிர்வாகம் என்பன இலங்கை முறைமைகளிலிருந்து வேறுபட்டவை எனவே இந்த மாதிரிகளை ஒரு பொதுநலவாய நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென அவர் வாதிட்டார்.

ஆயினும் இவரது ஆட்சேபத்தை புறத்தொதுக்கிய நீதவான் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பணித்தார்.

Tags: , , ,

Leave a Reply