உலக தமிழர்களை அவமதிக்கப் போகிறாரா இந்தியப் பிரதமர்; அரியநேந்திரன் எம்.பி கேள்வி

ariyanenthiranபொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டால் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் செயலாகவே அது கருதப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு விடுத்த அழைப்பு தவறான அர்த்தத்தில் விமர்சிக்கப்படுகிறது. உண்மை நிலை அதுவல்ல

இன்றைய வடக்கின் நிலையை அவர் நேரில் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலுடனேயே அவ்வழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை பொதுநலவாயத்துடன் தொடர்புபடுத்துவது தவறானதொரு கண்ணோட்டமாகும்.

இசைப்பிரியாவின் காணொளி விவகாரம் மற்றும் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் மலிந்துள்ள இவ்வேளையில் இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்கு வருவாராக இருந்தால் அது இலங்கைத் தமிழர்களையும் தமிழக உறவுகளையும் ஏனைய உலகத் தமிழர்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே அமைந்து விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அழைப்பையேற்று இந்தியப் பிரதமர் வருவதாக இருந்தால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை அண்டிய காலப்பகுதியில் வரவேண்டும்.

பொதுநலவாய மாநாடு நடைபெறும் இக்காலப்பகுதியை உலகத் தமிழர்களுக்காக, அதுவுமின்றி கதியற்று நிற்கும் இலங்கைத் தமிழர்களை மனங்கொண்டு அவர் புறக்கணிக்க வேண்டும். என்று கிழக்கு மக்கள் சார்பில் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: ,

Leave a Reply