அமர்வுகளில் பங்கேற்காமைக்கு மன்மோகன் விளக்கம் அளிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

peries2பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறித்து பிரதமர் மன்மோகன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுவும் பங்கேற்காமல் விடுவதும் அவரவர் விருப்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் தலைவர் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தினால் அமர்வுகள் தோல்வியடைப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமர்வுகளில் பங்கேற்காமைக்கு எந்தவொரு நாடும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply