தமிழர்களைத் திருப்பி அனுப்பாதே; சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கோரிக்கை

Swiss-flagஇலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையயழுத்து ஆவணம் கடந்த வியாழக்கிழமை சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் கிளை, அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பு, அகதிகளுக்கான உதவி நிறுவனங்களின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட கையயழுத்து ஆவணமே இவ்வாறு சுவிஸ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பேர்ண் நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வைசன் ஹவுஸ் பிளற்ஸ்சில் கூடிய பிரதிநிதிகள் ஊர்வலமாக நாடாளுமன்ற முன்றல் வரை சென்று அங்கு ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினர். தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று கையெழுத்துப் படிவங்கள் கையளிக்கப்பட்டன.

Tags: , ,

Leave a Reply