உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை; ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

peries2வெளிநாட்டு அழுத்தங்களுக்காக வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை,

சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதே எமது நிலைப்பாடு எனவும் அதில் மாற்றமில்லை. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நாட்டுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வந்த பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு இந்த அமர்வுகள் வழியமைத்துள்ளது என அவர் சுட்டிகாட்டியதுடன்,

கொழும்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை நேரில் பார்வையிட வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலும் பாரியளவில் நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது

அத்துடன் பெரும்பான்மையானவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளன ஆனால் இரண்டு நாடுகள் மட்டுமே புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் செயற்பட்டன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுது.

யுத்தம் இடம்பெற்ற பல நாடுகளில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு பாரிய கால அவகாசம் தேவைப்பட்ட போதிலும், இலங்கை விவகாரத்தில் சில நாடுகள் துரித கதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply