கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது!

vikramaயுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இன்று திடீரென தமிழர்கள் தொடர்பில் “ஞானம்” பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது என நவசமசமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான கண்காட்சியை நாமே நடத்தினோம். எனவே இதற்காக ஐ.தே.கட்சியின் பிரமுகர்கள் சில பொதுபலசேனாவிடம் மன்னிப்பு கேட்டதென்பது அவர்களது சொந்த விருப்பமாகும். நாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டோமென்றும்

யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கமரூன் இதனை தடுத்தாரா இல்லாவிட்டால் இது தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடு செய்தாரா எதனையும் செய்யவில்லை.

இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கான உதவிகளை பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் வழங்கினார். ஆனால் இன்று திடீரென கமரூனுக்கு “ஞானம்” பிறந்துள்ளது. யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையென தெரிவித்துள்ளார்.

காலம் கடந்தாவது கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமையை வரவேற்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply