ஒரு தேசக் கனவை நெஞ்சில் சுமந்து தம் இன்னுயிர் ஈந்தோருக்கு எம் வணக்கம்!

Maveerar-malar“எந்த ஒரு மனிதன் இறந்தால் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இது இந்துக்கள், பௌத்தர்கள் ஏன் மற்றைய மதத்தாருக்குக் கூடப் பொருந்தும்.

எல்லாளன் இறந்தவுடன் அவன் ஞாபகார்த்தமாக துட்டகைமுனு ஒரு நினைவு மண்டபம் அமைத்து போவோர் வருவோர் இறந்த அந்த மகா மனிதனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்றும் அந்த இடத்தில் தமது வணக்கத்தைத் தெரிவித்துப் போக வேண்டும் என்று ஆணையிட்டான்.

நான் சிறுவனாக அனுராதபுரத்தில் குடியிருந்தபோது எங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் சிற்றம்பலம் டாக்கீஸ் என்ற படமாளிகை அமைந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சத் தூரத்தில் தான் எல்லாளன் நினைவிடம் [எலாள சொகன] இருந்தது.

1946 – 1947ம் ஆண்டுகளில் துவிச்சக்கர வண்டிகளில் அவ்வழியே சென்றவர்கள் அந்த நினைவிடத்தில் தரித்து நின்று தொப்பியைக் கழற்றி வணக்கம் தெரிவித்து விட்டு திரும்பவும் ஏறிச் சென்றதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.

ஆனால் அந்த எலாள சொகன இப்பொழுது அழிக்கப் பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட துட்டகைமுனுவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இன்று இறந்தவர் நினைவாக மரம் நாட்டுவதைக் கூடத் தடைசெய்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு எமது நாட்டு மக்கள் கலாச்சார, சமயப் பின்னடைவு அடைந்துள்ளார்கள் என்பது விளங்கும்.”
 
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை

Tags: , ,

Leave a Reply