வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் இன்று (28) காலை மலர் வளையம் மற்றும் பூமாலை வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டின் முன் மலர் வளையம் வைத்து மாலை போடப்பட்டிருந்ததை இன்று காலையில் தான் பார்த்தாகவும் இரவு வேளையில் இவ்வாறு மலர் வளையம், பூமாலை வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமின்றி அரச படையினரின் திட்டமிட்ட அச்சுறுத்தலே இது என அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தை அறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேச தவிசாளர் வீடு, வல்வெட்டித்துறை உபதவிசாளர் வீடு, வலி.மேற்கு தவிசாளர் வீடு, மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீடு, வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசனின் வீடு, வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வீடு என கடந்த இரு தினங்களில் யாழில் மக்கள் பிரதிநிதிகள் நால்வரின் வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
















