இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டது – PPT

PPT-tribunalஜெர்மனியின் பேர்மினில் கடந்த சில தினங்களாக இலங்கைக்கு எதிரான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்து பேரவை ஆகியன இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கு தொடர்பான முதலாம் கட்ட விசாரணை 2010ம் ஆண்டில் டப்ளினில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முதல் தடவiயாக நீதிமன்றமொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே மற்றும் புலம்பெயர் தமிழர்களும் இந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Tags: , , ,

Leave a Reply