நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன்படி நாட்டில் 30 வருடகாலமாக இருந்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்தமைக்கான கௌரவம் இலங்கைக்கு கிடைக்கவில்லை.மாறாக யுத்தக் குற்றச்சாட்டுக்களே எழுந்துள்ளன.
எனினும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது.
அத்துடன் கடத்தல் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.
மேலும் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழ் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். அதவேளை. பிரான்ஸ், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் யுத்தத்தை இடைநிறுத்துமாறு அரசிடம் கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் யுத்தத்தை இடைநிறுத்தியிருந்தால் இன்னமும் யுத்தம் நீடித்திருக்கும் .
ஆயினும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















