வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி பூஜை

valai-siva1மஹா சிவராத்திரியை முன்னிட்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜைகள் வியாழக்கிழமை இரவு ஆலயத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
valai-siva2
இதன்போது இங்கு நான்கு சாமப் பூஜைகளை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ.என்.முரசொலிமாறன் குருக்கள் நடாத்தி வைத்தார். இதன்போது நூற்றுக் கணக்கான சிறுவர் முதல் பெரியோர் வரை தங்களுடை விரதங்களை ஆலயத்தில் இருந்தவாறே அனுஷ்டித்து வந்தனர்.

இவ் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு இந்து இளைஞர் மன்றம்; வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினருடன் இணைந்து மஹா சிவராத்திரி விழாவினை நடாத்தியது.

அந்தவகையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கல்குடா வலயத்தின் வாழைச்சேனை கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்து இளைஞர் மன்றத்தினால் மாணவர்களுக்கு கோலம் போடுதல், பூமாலை கட்டுதல், பஞ்சபுராணம் ஓதுதல், பேச்சு, சைவ சமய அறிவுக் களஞ்சியப் போட்டி, சைவசமய எழுத்துப் பரீட்சைப் போட்டி, தனி நடனம், குழு நடனம், பாவோதல், வில்லுப் பாடல் விவாதம் உட்பட்ட போட்டிகளை நடாத்தியது.

இங்கு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சிவராத்திரி தினத்தை ஒட்டியதான நடனங்களும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவரும், மன்றத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், வாழைச்சேனை தங்கமஹால் நகைமாளிகை உரிமையாளர் இராமசாமிப்பிள்ளை மணி, இந்து இளைஞர் மன்ற செயலாளர் ச.ராஜகுமார், அதன் உறுப்பினர்கள், பத்திரகாளி அம்மன் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், இந்து சமய ஆர்வாளர்கள், சேக்கிழார் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் இந்து மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவரும், மன்றத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனால் சிவராத்திரி தின சிறப்பு சொற்பொழிவுகள் இடம்பெற்றது.

Tags: , , ,

Leave a Reply