ஸ்கொட் மொரிசன் இரகசியமாக யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தார்

scott-morrisonஅவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இரகசியமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகொப்டர் மூலம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வட மாகாண ஆளுனர் சந்திரசிறியை மட்டுமே சந்தித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த எவரையும் மொரிசன் சந்திக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனையும் மொரிசன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்கொட் மொரிஸன்- புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாண அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வட மாகாண சபை தொடர்ந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவை விஜயம் செய்வதாகவும் மாற்றங்களை அவதானிக்க முடிவதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை நிர்ணய அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply