நவ்ரு முகாம் அகதி சிறுவர்கள் இன்று நவ்ரு தீவில் உள்ள அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு மகயரை கையளிக்கும் வண்ணம் அமைதி போராட்டத்தை தற்போது நடத்தி வருவதாக அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பாளர் இயன் தெரிவித்துள்ளார்
சுமார் 80 சிறுவர்கள் இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தை நவ்ரு தீவில் உள்ள அவுஸ்ரேலியாவுக்கான உயர் ஆணையகத்துக்கு தகவல் தெரிவிக்கும் வண்ணம் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்
இதில் கலந்து கொண்டவர்கள் மொரிசனின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கோசத்தையும் எழுப்பியுள்ளனர்.
மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏன் எங்களை பார்க்க வில்லை மினித உரிமை அமைப்புகள் இருந்தால் மோரிசன் இது போன்று நடத்துவார?
தாங்கள் கால வரையற்ற தடுப்பில் வைப்பது மனித உரிமை மீறலாகும் என்றும் அகதிகள் சட்டம் மீறப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தன்னை தானே துண்புறுத்திய 4 சிறுவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவுஸ்ரேலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இயன் தெரிவித்துள்ளார் .
நங்கள் விட்டுக் கொடுப்பதற்கு உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை எங்களை கொன்று விடுங்கள் என்று சிறுவர்கள் கூரியது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர்களின் இந்த நிலைமையை கண்டித்து மிக விரைவில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















