அரசு சர்வாதிகார பயணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியதுமை உண்மை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கொலன்னாவ சேதவத்தை வெரகொட புராண விகாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நவநீதம்பிள்ளை கூறியது உண்மையே. நாட்டில் ஜனநாயக உரிமைகள் இல்லாமல் போகும் போது சர்வாதிகார நிலைமை ஏற்படும்.
தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அரசின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
நான் ஒருபோதும் எனது அரசியல் நடவடிக்கைகளில் கே.பி போன்றவர்களை இணைத்து கொள்ள மாட்டேன். இது சாதா ரணமான ஜனநாயக சமூகத்தில் நடக்காது. தீவிரவாத தலைவர் ஒருவரிடம் இருந்து உதவிகளை பெற்று கொள்ளும் போது எமது நாட்டுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.
ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த இந்தியா கே.பியை கேட்டுள்ளது. இப்படியான ஒருவரை எமது தேர்தல் மேடையில் இணைத்து கொள்ளும் போது, அது இந்தியாவை ஆத்திரம டைய செய்யும் என்பது ஆச்சரி யமான விடயமல்ல” என்றார்.
















