சமஷ்டி பற்றி சிங்கள மக்கள் அரசுக்கு பாடமெடுக்க வேண்டும்; இதுவே தான் அவர்களுக்கு சொல்லும் செய்தி என்கிறார் வடக்கு முதல்வர்

vikineswaran5சிங்கள மக்கள் தங்கள் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சமஷ்டி பற்றி பாடம் எடுக்க வேண்டும். அதன் பின்னர் தான் இரு இனங்களும் இணைந்து வாழும் நிலை தோன்றும் இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.

யாழ். ரில்கோ கோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் சிங்கள மக்கள் ஒரு போதும் கூட்டமைப்பு பற்றியோ அல்லது கூட்டமைப்பு வெயிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் பற்றியோ அச்சமடையத் தேவையில்லை.

ஏனெனில் ஒருபோதும் நாட்டை பிரிக்க நினைக்கவில்லை. சமஷ்டி என்பது பிரிவினை அல்ல. உண்மையில் சமஷ்டி என்பது மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கு இடையில் அதிகாரங்களைப்பகிர்ந்து இணைந்து செயற்படும் முறைதான்.

மத்திய அரசு மேலெழுந்த வாரியான ஆட்சி முறையைக் கவனிக்க மாநில அரசுகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் முறைமைதான் சமஷ்டி.

நான் சிங்கள மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவெனில் இந்த விடயம் தொடர்பில் அவர்கள் தமது அரசுக்கு தெளிவுபடுத்த பாடமெடுக்க வேண்டும். இவ்வாறு அரசியல் வாதிகள் சம்ஷ்டியை புரிந்து கொள்ளும் வகையில் சிங்கள மக்கள் தெளிவுபடுத்துவார்களேயானால் எதிர்காலத்தில் இரு இனங்களும் இணைந்து வாழ்வதில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் என்று நான் கருதவில்லை என்றார்.

Tags: , , , , ,

Leave a Reply