முதலமைச்சரை புதுடில்லி அழைப்பு! பொதுநலவாய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின் சுரேஸ் எம்.பி தெரிவிப்பு

Suresh-Premachandran3ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றின் பொதுநலவாய பிரதிநிதிகளை சந்தித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றல், காணிகளை உரியவரிடம் கையளித்தல், ஓர் அரசியல் தீர்வை உருவாக்குதல் என்பவற்றை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் யூலியா பிஷப், பிரித்தானிய வெளிநாட்டு செயலாளர் வில்லியம் ஹேக், இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தனர்.

மாகாண ஆளுநரிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்துள்ளன. இந்த அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும் என நாம் இந்த பிரதிநிதிகளிடம் பிரஸ்தாபித்தோம் என பிரேமசந்திரன் கூறினார்.

இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளருடனான சந்திப்பைப்பற்றி கேட்டபோது வடக்கு மக்களுக்கு இந்தியா அதன் ஆதரவை மீண்டும் உறுதியளித்தது என அவர் கூறினார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதுடில்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளாரென பிரேமசந்திரன் கூறினார்.

Tags: , , , , ,

Leave a Reply