போரால் பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொண்டு வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Vav-siv5போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐந்து வரவு செலவுத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அரசினால் எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசேட தேவைக்கு உட்பட்டோர் தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தின் நயினாமடு பொது நோக்கு மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இணையும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு தணிகாசலம் சிவசேகரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

நடைபெற்ற போரினால் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் விசேட தேவையை எதிர்நோக்க வேண்டிய நிலையிலுள்ளனர். அந்த மக்களது வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆக்க ரீதியான நடவடிக்கை எதனையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. போர் நடைபெற்று முடிந்ததன் பின்னர் இதுவரையில் ஐந்து வரவு செலவுத்திட்டங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அரசினால் எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. தொடர்ந்தும் அவல வாழ்வு வாழும் இவ்வாறான மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் உதவி செய்வதற்கு முன்வரவேண்டும். அவர்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்தி சமூகத்தில் அவர்களும் நல்ல நிலையில் வாழ்வதற்கு எம்மாலான ஒத்துழைப்புகளை அனைவரும் வழங்கவேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வின் போது, பொதுநோக்கு மண்டபத்திற்கென ரி.ஆர்.ரி வானொலியினால் வழங்கப்பட்ட 25,000 பணம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராஜா, இந்திரராஜா ஆகியோரும் நெடுங்கேணி பிரதேச சபை தவிசாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர் செல்வரட்ணம் ஆகியோருடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிரதா சந்திரகுலசிங்கம் ஆகியோருடன் வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி கெனடி மற்றும் நெடுங்கேணிப் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் தர்மேந்திரா ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
Vav-siv1

Vav-siv2

Vav-siv3

Vav-siv4

Vav-siv6

Tags: ,

Leave a Reply